நேர்காணலை எளிதாக்கலாம்…!

 நேர்காணல் என்றதுமே வேலை தேடுபவர்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. நேர்காணல் பற்றிய நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம். சிறப்பாக உடை அணிவது, அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பது, கேள்விகளுக்கு தயார் நிலையில் இருப்பது போன்றவை வழக்கமான நடைமுறைகள்தான். இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துகொண்ட பின்பும் நேர்காணலில் தடுமாற்றம் வருவது ஏன்? அந்த தடுமாற்றத்தை வென்று வெற்றிகரமாக நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? இங்கே பார்க்கலாம்…   * இலக்கு அறிதல்   பணிக்கான தகுதிகள் … Read more

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் வந்தது எப்படி?

பென்சிலால் தவறாக எழுதிவிட்டால், இன்று நாம் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ரப்பர் கண்டுபிடிப்புக்கு பின்னால் பெரிய கதையே இருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் எரேசர் எனப்படும் ரப்பர், செயற்கை ரப்பரில் இருந்து செய்யப்படுகின்றது.  சரி, ரப்பர் மட்டும் பென்சில் கறையை எப்படி நீக்குகிறது? என ஆராயலாம். அதாவது, ரப்பர் காகிதத்தைவிட அதிக ஒட்டும்தன்மை கொண்டது. அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்து தேய்க்கும்போது, காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராபைட் (பென்சில்முனை கிராபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில் ஒட்டிக்கொள்கிறது.  அதனால் அந்த இடத்தில் எழுத்து … Read more

தமிழக மாவட்டங்கள்- சிறப்பு பெயர்கள்

தமிழக மாவட்டங்கள்- சிறப்பு பெயர்கள்  கோவை -தென்னிந்தியாவின் மான்செஸ்டர்   நீலகிரி -மலைகளின் ராணி  திருப்பூர் -பின்னலாடை நகரம்   ஈரோடு -மஞ்சள் நகரம்   கரூர் -நெசவாளர்களின் வீடு   சேலம் -மாம்பழ நகரம்   நாமக்கல் -முட்டை நகரம்   தர்மபுரி -தோட்டப்பயிர்களின் பூமி   வேலூர் -கோட்டைகளின் நகரம்   திண்டுக்கல் -பூட்டு நகரம்   மதுரை -தூங்கா நகரம்   நெல்லை -தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு   தஞ்சாவூர் -அரிசி கிண்ணம்   தூத்துக்குடி -முத்து நகரம்   கே.தருனிகா,5-ம் வகுப்பு, பிரிண்டிசி மெட்ரிக் மேல்நிைலப்பள்ளி, கோவை.

சமூக வலைதலங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி?

அறிவை விரிவு செய்யவும், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும், பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் என சமூக வலைத்தளங்களின் நன்மைகள் ஏராளம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தலைமுறையைச் சேர்ந்தவர்களும், இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.  இதில் நிறைய பேர், ஒரு கட்டத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்தாமல், அளவுக்கு அதிகமாக அதில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றைத் தவிர்த்து, சமூக வலைத் தளங் களே … Read more

வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்

வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள், குழந்தை வளர்ப்பு என சுழன்றுக்கொண்டே இருக்கும் பெரும்பாலான பெண்கள், நேரம் இல்லை எனும் காரணத்தால் தங்களை கவனித்துக் கொள்வது இல்லை. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் எதையும் எளிதாகக் கையாளலாம். இதோ அதற்கான சில வழிகள்.  அவசியத்திற்கு முன்னுரிமை:  நாள் தொடங்கும்போதே, அன்று எந்தெந்த வேலைக்கு முதலிடம், எதற்கு இரண்டாம் இடம் தருவது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை … Read more

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள் ளும்போது என்னென்ன முறைகளைப் பின்பற்றுவது?  படிக்கும்போது நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் நிர்வகிப்பது என்பதற்கான வழி முறைகள்….  தேர்வுகளுக்குத் தயாராகும்போது, நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் இருந்து, நமது வெற்றிக் கான பாதை தொடங்குகிறது. எனவே நேர மேலாண்மை குறித்த புரிதல் வேண்டும். இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 24 மணி நேரத்தில், நாம் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்தையும் குறித்த ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது சிறந்தது. விளையாட்டு, உறக்கம், … Read more

15 நிமிடங்களில் ரீசார்ஜ் செய்யலாம்!

மின்சார வாகன பயன்பாட்டுக்கு சாதகமான கொள்கைகளை உலக நாடுகள் வகுத்து வருகின்றன. ஆனால் மின் வாகனத்தில் நீண்ட தூரப் பயணத்துக்கான மின்சக்தி ஏற்ற முடியாததும், மின்சக்தியை பேட்டரியில் ஏற்றுவதற்கு நீண்ட நேரம் பிடிப்பதும் இதனுடைய குறைகள்.   நொடிப் பொழுதில் எரிபொருள் பங்க்குகளில் பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு செல்வதைப் போல மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதி இல்லாததும் பெரும் குறையாகவே கருதப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை விரைவில் சார்ஜ் செய்யும் ஆய்வில் உலகம் முழுவதும் … Read more

பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிமுறைகள்…

பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிமுறைகள்…  வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் அலங்காரப் பொருட்கள் வரை பித்தளையினால் செய்யப்பட்டவை சிறிது சிறிதாக மறுபடியும் வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம். பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் புழக்கத்தில் இருந்த ஒரு உலோகமானது மறுபடியும் பெரும்பாலான வீடுகளில் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது.   தங்கம் போன்று மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் பித்தளையினால் பூஜை சாமான்கள் முதல் வீட்டு வரவேற்பறை மற்றும் வீட்டின் முகப்புகளை பிரமாண்டமாக அலங்கரிக்கும் யானை, … Read more