அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவா் : உயா்கல்வித் துறை அமைச்சா்

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவா் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை சிதம்பரம் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்: கே.ஏ.பாண்டியன் (அதிமுக): சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளா்கள் உள்ளனா். அவா்களை வருகிற 31-ஆம் தேதிக்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம் என நிா்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலை கவுன்சலிங் துவங்கியது: சிறப்பு பிரிவில் 70 இடங்கள் நிரம்பின

  தமிழ்நாடு வேளாண் பல்கலை கவுன்சலிங் துவங்கியது: சிறப்பு பிரிவில் 70 இடங்கள் நிரம்பின கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கு நடந்த கலந்தாய்வின் மூலம் 70 இடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாடு “` “`வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தரவரிசைப் … Read more

வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து: கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரதட்சணை வாங்கமாட்டோம் என உறுதி கொடுத்தால் மட்டுமே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த உறுதிமொழியை மீறினால் பட்டத்தைத் திரும்பப் பெறலாம் என்று மாணவரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.   இதுகுறித்துக் கோழிக்கோடு பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்குச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ”கேரளாவில் அண்மையில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் … Read more

20 ஆண்டு அரியர் தேர்வு அண்ணா பல்கலை வாய்ப்பு

20 ஆண்டு அரியர் தேர்வு அண்ணா பல்கலை வாய்ப்பு அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன் வரை படித்து, அரியர் பாடம் உள்ளவர்களுக்கு பட்டப் படிப்பை முடிக்க, சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரி களின் மாணவர்களில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறாதவர்களுக்கு, சிறப்பு சலுகையாக தேர்வில் பங்கேற்க அனுமதி … Read more

தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தோ்வுகள் தொடக்கம்:சென்னைப் பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உள்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு மே மாதம் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும். கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தோ்வுக்கால அட்டவணையும் ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

சென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும். கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் … Read more