ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தருவாயில் உள்ளன – அமைச்சர் மகேஷ் பேட்டி

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன.  ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ‘ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன  

6 முதல் 9 வரை மாணவர்களுக்கு தேர்வு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முக்கிய அறிவிப்பு

  தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத் தேர்வு உள்ளிட்ட பள்ளித் … Read more

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை !

 சென்னையில் 28.12.2021 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi  அவர்களது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்கான 5-வது ஆய்வு கூட்டம், நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கல்விச் செயல்பாடுகள் நல்ல சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களை பாராட்டி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நிகழ்வில்  #தஞ்சாவூர்_முதன்மை_கல்வி_அலுவலர்_திரு.#மு_சிவகுமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய நிகழ்வு.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார். சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளியை நாடுகின்றனர். இதைத் … Read more

1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது உறுதி முழு நாளும் வகுப்புகள் உண்டு: கல்வி அமைச்சர் அவர்கள்

வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா விதிகளை பின்பற்றி, முழு நாளும் வகுப்புகள் நடக்கும்,” என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, தமிழகத்தில், ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ என்ற டியூஷன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக தமிழகத்தில் உள்ள பட்டதாரிகள் யார் வேண்டுமானாலும் சேரலாம். இதில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கொள்கைக்கு எதிரானவர்கள் நுழைந்து விட வாய்ப்புள்ளதாக, கூட்டணி கட்சியினர் … Read more

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். எந்தவித மாற்றமும் இ்ல்லை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழகத்தில் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என கேட்கிறார்கள். தீபாவளிக்கு பிறகு திறக்கலாம் என சொல்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் தங்கள் குழந்தைகளை 1-ந்தேதி முதல் பள்ளிக்கு அனுப்பலாம். இல்லையென்றால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு அனுப்பலாம். ஆனால் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் … Read more

பள்ளிகளில் மாணவர்களை அடித்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது;- மற்ற துறைகளைபோல் ஜீரோ கவுன்சிலிங் என்பதை பள்ளிக்கல்வித்துறையில் நடத்துவது கடினம். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சிதான் குழந்தைகளுக்கு ஏதுவாக இருந்தது. இனி வரும் காலங்களிலும் அது செயல்படுத்தப்படும்.  தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் அதிகரிப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. தற்போதுள்ள 120 கல்வி மாவட்டங்கள் மட்டுமே இயங்கும். பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால், … Read more

திட்டமிட்டபடி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

முதல்-அமைச்சர் கூறியபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு, அரையாண்டுக்கு பதிலாக டிசம்பர் மாதத்தில் மாதிரி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் கொரோனா தொற்றுக்கு இடையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதன் தொடர்ச்சியாக வருகிற 1-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட … Read more

1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்  பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே, வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ ‘1-ம் வகுப்பு சிறுவர்- சிறுமியர் முதல் முறையாக நவம்பர் … Read more