தொகுப்பூதிய உயர்வு ஆணை… இந்து சமய அறநிலையத்துறை தற்காலிக ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை தமிழக அரசு வழங்கியது.  இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.1.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய … Read more

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள்இன்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்தனர்.அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைத்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக … Read more

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. அந்த … Read more

அமெரிக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! அலசி ஆராய்ந்து செயல்வடிவம் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

 அமெரிக்காவில் வேளாண்மைத்துறை மூலம் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.இதன் மூலம் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் அந்த திட்டத்தை முதல்வர் கூர்ந்து கவனித்து அலசி ஆராய்ந்திருப்பது தெரிய வருகிறது.தனது கனவுத் … Read more

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்: ”உயர்கல்வியில் ஒரு புரட்சி” டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் … Read more

அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினம் – முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!

  அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.மனிதர்களை மனிதர்களாக்குவதும் மாமேதைகளாக்குவதும் கல்வி தான் என அவர் கூறியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு ” – என்கிறார்.இக்குறட்பாவிலுள்ள ‘தக்கார்’ என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் … Read more

DA – அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு.

  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று இன்றைய சுதந்திர கொடியேற்றத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து, 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் கூறினார்.

பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் இருக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

 பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரங்களில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டு சொல்வேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற போது அதை சொல்ல முடியவில்லை. ஏனென்றால், ஒருவிதமான … Read more

பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும் : முதல்வர்

 தமிழகத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பள்ளிகள் பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலூா் மாவட்டம் பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, 12ம் வகுப்பு படித்து வந்தாா். மாணவி கடந்த 13ம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா்.இதையடுத்து, அவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் … Read more

அதிகரிக்கும் கொரோனா.. புதிய கட்டுப்பாடுகள் அமலாகுமா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,159-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 83-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 137 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் … Read more