நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வகுப்பறை மாணவர்களுக்கு உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பெறப்படும் நிதிகள் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதிகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் உதவ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் … Read more

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை..

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அறிவிப்புகள், அரசாணைகள், திட்டங்கள் பற்றி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசித்து வருகிறார்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிற்பி திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

  பள்ளி மாணவா்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றை ஊட்ட சிற்பி திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய் ராம் கல்லூரியில் சிற்பி திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம், தேசப்பற்றை ஊக்குவிக்கும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தை தொடக்கி வைத்த அமைச்சா் … Read more

மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் காலணி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருக்காட்டுப்பள்ளி, அக். 14: பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்துக்குள் காலணிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செல்லப் பன்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப் புத் துறை சார்பிலான சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற் றது. முகாமுக்கு திருவையாறு எம்எல்ஏ துரை. சந் திரசேகரன் தலைமை வகித்தார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி … Read more

எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. : அமைச்சர்

  எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார். எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளியை சுத்தம் செய்யவதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு முன்னறிவிப்பின்றி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். … Read more

காலை உணவு திட்டம் – சிறப்பு கண்காணிப்பு செயலி அறிமுகம்

பள்ளிகளில் காலையில் வழங்கும் உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். மதுரையில் உள்ள அரசு பள்ளியில் அவரே நேரடியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார். இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு … Read more

பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி

பள்ளிகளில் மாணவர்கள் இடையே சாதி பாகுபாடு பார்த்தவர்கள் மீது கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை தரையில் உட்காரச் சொன்னதாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தியுள்ளார். இந்த பிரச்னை மிகவும் உணர்வுப் பூர்வமான விஷயம். இதில் அவசரப்பட்டு எந்த … Read more

நிதித்துறை அமைச்சர் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சந்திப்புக்கான கூட்டப்பொருள் வெளியீடு.

 29.08.2022 (அ) 30.08.2022 அன்று நிதித்துறை அமைச்சர் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சந்திப்புக்கான கூட்டப்பொருள் வெளியீடு.

இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.

  கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில். கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவில் மனதளவில் பாதித்தது. தற்போது, தான் சார்ந்திருக்கிற ஊரிலேயே இளைஞர்கள் மூலமாக கல்வியை மாணவர்கள் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி … Read more