அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி : நிதியமைச்சர்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். சென்னை: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத் தப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மனிதவள மேலாண்மைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த செல்லிடைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை செயலி மூலம் … Read more