ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தருவாயில் உள்ளன – அமைச்சர் மகேஷ் பேட்டி

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன.  ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ‘ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன  

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? – நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்!

தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது” ​ஓய்வூதிய திட்டம்​ “பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பல்வேறு … Read more

நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வகுப்பறை மாணவர்களுக்கு உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பெறப்படும் நிதிகள் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதிகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் உதவ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் … Read more

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கலிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வாய்த்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பணி நீட்டிப்பு போராட்டம்: அரசு கைவிடாது அமைச்சர் பேச்சு

 சென்னை: பணி நீட்டிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒப்பந்த செவிலியர்கள் ஒருவரையும் கைவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.    கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா்.    ஒப்பந்த காலத்திற்கு … Read more

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் வெயிட்டேஜ் தோ்வு முறை ரத்து: அமைச்சா் பொன்முடி தகவல்

 தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களைப் போட்டித் தோ்வு மூலமாக நிரப்புவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நிகழாண்டு 4,000 பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு வரை உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையிலான நோ்காணல் தோ்வு … Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2,346 இடங்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.   முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ள இன்று அதற்கான தர வரியை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணிய வெளியிட்டார். இவை … Read more

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

  தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைப்பு – உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

 தமிழகம் முழுவதும் ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. மதுரை கொடிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை அண்மையில் இடிந்து விழுந்தது. எனவே அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு … Read more

காலை உணவுத் திட்டத்திற்கு தனி உணவுக் கூடம் அமைத்தது ஏன்? – அமைச்சர் விளக்கம்

காலை உணவுத் திட்டத்தில் நேரம் தவறக்கூடாது என்று தான் தனி உணவுக் கூடம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர். இனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து … Read more