மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் Prosthetic Craftsman பணிக்கென காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Prosthetic Craftsman பணிக்கென 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500/- முதல் ரூ.71,900/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Tamil Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment