No interest: கிரெடிட் கார்டுக்கு டஃப் கொடுக்கும் Charge cards..! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 5, 2025

No interest: கிரெடிட் கார்டுக்கு டஃப் கொடுக்கும் Charge cards..!

 நம் நாட்டவர்கள் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிரெடிட் கார்டு போலவே பயன்படுத்தக்கூடிய சார்ஜ் கார்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அது என்னப்பா சார்ஜ் கார்டு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?, அது வேற ஒன்னும் இல்லைங்க, முதல்ல சொன்ன மாதிரி அது கிரெடிட் கார்டு மாதிரிதான் ஆனால் அது இல்லை. அட என்னப்பா குழப்புறீங்க என்கிறீர்களா?. கிரெடிட் கார்டுடன் ஒப்பிட்டு சொன்னால் சார்ஜ் கார்டுன்னா என்ன என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.


உச்ச வரம்பு கிரெடிட் கார்டில் இவ்வளவுதான் செலவு செய்யலாம் என்ற முன்கூட்டிய கடன் வரம்பு உண்டு. அந்த வரம்பை தாண்டி செலவு செய்ய முடியாது மேலும் கடன் வரம்பை உயர்த்த வேண்டுமானால் நிதி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து அதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
ஆனால், சார்ஜ் கார்டில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நிலையான கடன் உச்ச வரம்பு கிடையாது. அதனால் தாராளமாக செலவு செய்யலாம். இருப்பினும், வழங்குபவர் சில சந்தர்ப்பங்களில் வரம்புகளை விதிக்கலாம். அதேசமயம், சார்ஜ் கார்டு வாயிலாக செய்யப்படும் செலவுகள் கண்காணிக்கப்படுகிறது. மாதாந்திர பில் கிரெடிட் கார்டு மாதாந்திர பில் வரும்போது, நீங்கள் அதில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தலாம். பாக்கி தொகை அடுத்த மாத பில்லுக்கு சென்று விடும். ஆனால் சார்ஜ் கார்டில் மாதாந்திர பாக்கி தொகையை கட்டாயம் முழுமையாக செலுத்த வேண்டும்.
Click here to more government orders 
பாக்கியுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் முழுமையாக செலுத்தப்பட வேண்டும், எந்தவொரு பாக்கி தொகையையும் அடுத்த மாதத்துக்கு எடுத்து செல்ல முடியாது. யாருக்கு சாியானது ஒவ்வொரு மாதமும் தங்கள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தக்கூடிய, அதிக வருமானம் கொண்ட தனிநபர்கள், ஒழுக்கமான செலவு பழக்கம் கொண்ட நபர்கள் சார்ஜ் கார்டை வாங்கி தாராளமாக பயன்படுத்தலாம். வாடிக்கையாளரின் பணபரிவர்த்தனை வரலாறு மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை பொறுத்து சார்ஜ் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் சார்ஜ் கார்டு கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சார்ஜ் கார்டுக்கான சந்தை குறைவாகவே உள்ளது

 


. இந்தியாவில் சார்ஜ் கார்டு வழங்கும் ஒரே நிதி நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ். இந்நிறுவனம் நம் நாட்டில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்டு கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கார்டு என 2 விதமான கார்டுகளை வழங்குகிறது. ரூ.6 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் கொண்ட தனிநபர்கள் கோல்டு கார்டு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்டவர்கள் பிளாட்டினம் கார்டு வாங்கலாம்.

No comments:

Post a Comment