Home loan ஐ ஒரு பேங்க் ல இருந்து மற்றொரு பேங்குக்கு மாற்ற வேண்டுமா? – முதலில் இதை படிங்க. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 3, 2025

Home loan ஐ ஒரு பேங்க் ல இருந்து மற்றொரு பேங்குக்கு மாற்ற வேண்டுமா? – முதலில் இதை படிங்க.

 இந்தியாவில் பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு கடன்களை வழங்குகின்றன. நம்முடைய தேவைக்காக ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்கிய பிறகு வேறொரு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்றால் நீங்கள் எளிதாக கடனை அந்த வங்கிக்கு மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்


வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்யும்போது குறிப்பிட்ட சில கட்டணங்களை நாம் செலுத்த வேண்டியது இருக்கும். முதலில் செயலாக்க கட்டணம் இதனை ஆங்கிலத்தில் processing fee என அழைப்பார்கள். நீங்கள் கடனை மாற்றக்கூடிய வங்கிக்கு அதற்கான செயலாக்க கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இது உங்களுடைய மொத்த கடன் தொகையில் 0.5 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை இருக்கலாம்.
சில வங்கிகள் செயலாக்க கட்டணங்களை தள்ளுபடி கூட செய்கின்றன. பழைய வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இருக்கும் உங்களுடைய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதிய வங்கியிடம் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இதற்கு பழைய வங்கி நீங்கள் எந்தெந்த ஆவணங்களை பணயமாக வைத்திருக்கிறீர்கள் என்பதை பட்டியலிட்டு ஒரு அதிகாரப்பூர்வமான கடிதத்தை தயார் செய்து கடனை மாற்றம் செய்யவிருக்கும் புதிய வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
குறிப்பிட்ட நாட்களுக்குள் முழுமையான கடன் தொகையை வழங்கி விட்டால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நாங்கள் இந்த ஆவணங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம் என்ற உறுதிப்பாடும் அந்த கடிதத்தில் இடம் பெற்றிருக்கும். நீங்கள் வாங்கிய கடன் தொகை எவ்வளவு, அதற்காக இதுவரை எவ்வளவு திரும்ப செலுத்தி இருக்கிறீர்கள், புதிய வங்கி பழைய வங்கிக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கடிதத்தில் இடம் பெற்றிருக்கும்

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உங்களுடைய வீட்டு கடனை மாற்றம் செய்யும்போது அது நாள் வரை இஎம்ஐ தொகையை சரியான தேதியில் செலுத்தி இருக்கிறீர்களா என்பதை இரண்டு வங்கிகளுமே பார்க்கும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அப்படி சரியான முறையில் நீங்கள் இஎம்ஐ தொகையை செலுத்தி இருந்தால் மட்டுமே புதிய வங்கி உங்களுடைய கடனை மாற்ற ஒப்புதல் தெரிவிக்கும்.


வீட்டுக் கடன் வழங்குவதற்கு என்றே செயல்படக்கூடிய நிதி நிறுவனங்களிடம் நீங்கள் வாங்கி இருந்து அந்த கடனை வங்கிக்கு மாற்றுகிறீர்கள் எனும் போது ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றி மட்டுமே இந்த நடைமுறை தொடங்கும். வீட்டுக் கடனை ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்தோ அல்லது ஒரு வங்கியிடம் இருந்தோ மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்கிறீர்கள் எனும் போது முதலில் கவனிக்க வேண்டியது தற்போது உங்களுக்கு எவ்வளவு வட்டி விதிக்கப்படுகிறது நீங்கள் மாற்றம் செய்யக் கூடிய வங்கியில் இந்த வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விதிக்கப்படுகிறது என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும்.
கடனை திரும்ப செலுத்துவதற்கு உங்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது,

 


இந்த வங்கியில் இருந்து கடனை மாற்றுவதற்காக நீங்கள் கூடுதலாக எவ்வளவு செலவு செய்ய இருக்கிறீர்கள், அந்த செலவையும் புதிய வங்கியில் கடனை திரும்ப செலுத்தினால் ஆகக்கூடிய செலவையும் ஒப்பீடு செய்ய வேண்டும். அப்போது தான் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது சிறந்த முடிவா இல்லையா என்பதை நம்மால் கண்டறிய முடியும்


No comments:

Post a Comment