சாமானிய மக்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை தங்களது எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும், தங்களின் முதலீடுகள் மூலம் பாதுகாப்பான மற்றும் லாபகரமான வருமானம் ஈட்ட பெரும்பாலனோர் போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கிகளை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் வங்கி ஒன்று தனது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தி அமைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Shivalik Small Finance Bank) தனது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. மேலும், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள விவரங்களின்படி, “7 நாட்கள் முதல்
120 மாதங்கள் வரையிலான பல்வேறு டெபாசிட் திட்டங்களை SSFB வங்கி வழங்குகிறது. இந்த டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்யப்படும் சராசரியான மக்களின் பணத்திற்கு 3.5 முதல் 8.80 சதவீதம் வரை வட்டியும், மூத்த குடிமக்களின் டெபாசிட்டிற்கு 4 முதல் 9.3 சதவீதம் வரை வட்டியும் வழங்கபடுகிறது”. மேலும், “டாக்ஸ் சேவர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் 5 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.50 சதவீதமும்,
இதுவே மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது”. இத்திட்டத்தில் டெபாசிட் செய்து 7 நாட்கள் கழித்து பணம் எடுத்தால் வட்டி வழங்கப்படாது எனவும், இந்த “புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 22 முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
No comments:
Post a Comment