2025 ஆம் ஆண்டில் ஜனவர் 17-ஆம் தேதி அன்று அரசாங்கம் சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்புகள், அங்கீகரிக்கப்படாத மொபைல் எண் பயன்பாடு மற்றும் நிதி மோசடி போன்ற விஷயங்கள் குறித்து நுகர்வோர் புகார் அளிக்கலாம். இந்த அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் பயன்படுத்த முடியும். இன்றைய நவீன உலகில் வேகமாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக தற்போது இந்த அப்ளிகேஷன் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சஞ்சார் சாதி மொபைல் அப்ளிகேஷன் என்பது தகவல் தொடர்பின் பாதுகாப்பை மேம்படுத்த யூசர் பிரண்ட்லி அப்ளிகேஷனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்கிறது
என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்திருக்கிறார்.
சஞ்சார் சாதி அப்ளிகேஷனில் நீங்கள் என்னென்ன செய்ய முடியும்?: சந்தேகத்திற்குரிய மோசடியை புகார் அளிக்கலாம்: குடிமக்கள் சந்தேகத்திற்கிடமான மோசடி தொடர்புகள், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், ஆள்மாறாட்டம் போன்ற தவறான நோக்கங்களுக்காக உங்களுக்கு யாரேனும் அழைப்பு விடுத்தாளோ அல்லது SMS அல்லது வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பினாலோ புகார் அளிக்கலாம். திருட்டுப் போன மொபைலை பிளாக் செய்வது: சஞ்சார் சாதி அப்ளிகேஷனை பயன்படுத்தி தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களை கண்டறியலாம். மேலும் உங்கள் சாதனத்தை அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கிலும் இருந்து பிளாக் செய்யவும் இந்த அப்ளிகேஷன்
உதவும். இதனால் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சாதனங்களை யாருமே பயன்படுத்த முடியாது. ஒருவேளை யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அவை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் ட்ராக் செய்யலாம்.
உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை கண்டறியலாம்: இந்த ஆப் மூலம் உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை சரி பார்க்கலாம். எனவே தேவையில்லாத அல்லது பயன்படுத்தப்படாத நம்பரை பிளாக் செய்யலாம். இதற்கு முன்னர் அதற்காக பிரத்தியேக இணையதளம் இருந்தது. தற்போது இந்த ஆப்-பை பயன்படுத்திய கண்டறியலாம். சர்வதேச அழைப்புகளை புகார் அளித்தல்: குடிமக்கள் தங்களுக்கு வரும் வெளிநாட்டு அழைப்புகளை புகார் அளிக்கலாம். உதாரணமாக +91 என குறிப்பிடப்பட்டு வெளிநாட்டு எண்களை போலவே அழைப்புகள் தற்போது வருகிறது. அத்தகைய அழைப்புகளை பற்றி புகார் அளிப்பது தொலைத்தொடர்பு அமைப்பிற்கு சட்டவிரோதமாக செயல்படுபவர்களை எதிர்த்து செயல்பட உதவும்.
சஞ்சார் சாதி ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது?: முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் "எக்ஸ்ப்ளோர்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ஒரு புதிய பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் உங்களை பதிவு செய்யும்படி கொடுக்கப்பட்டிருக்கும். பதிவு செய்ய "ப்ரோசீட்" என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் இதை கிளிக் செய்யும்போது எல்லா ஆப்-களிலும் கேட்பது போலவே சில அனுமதிகள் கேட்கப்படும். அவற்றையெல்லாம் முடித்த பிறகு ஒரு SMS வரும்.
பதிவு செய்து முடித்தவுடன் அப்ளிகேஷனை பயன்படுத்த தொடங்கலாம்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள், போதைப்பொருள் கடத்தியதாக கூறும் மோசடிகள், ஜம்ப் டெபாசிட் மோசடிகள் என பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்களின் பணத்தை அபகரிக்கும் கும்பலை தடுக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது இனி வரும் நாட்களில் நிதி இழப்புகளில் இருந்து தப்பிக்க உதவும்.
No comments:
Post a Comment