நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் கடுகளவாவது சேமித்து வைப்பதை வழக்கமாக்க வேண்டும். காலப்போக்கில் வருமானத்தை அதிகரிக்க சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஒவ்வொரு முறையும் புத்தாண்டு பிறக்கும்போது தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலரும் ஆராய்கின்றன.ர் அந்த வகையில் இந்த வருடம் உங்களுடைய நிதி நிலையை மேம்படுத்தி, பணத்தை அதிகரிக்கச் செய்யும் சில யுத்திகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
முதலீட்டை பன்முகப்படுத்துதல்: தங்கள் சேமிப்பை அதிகரிக்கும் பொருட்டு பலரும் ஒவ்வொரு திட்டத்தில் முதலீடு செய்து கொண்டிருப்பீர்கள். ஒரே ஒரு திட்டத்தில் மட்டும் முதலீடு செய்வதை விடுத்து உங்கள் முதலீட்டை பன்முகப்படுத்துதல், செல்வத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் உங்கள் முதலீடுகளை பரப்பவும். இதனால் முதலீட்டின் அபாயம் குறைகிறது. ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிட்டு, பிற திட்டங்களிலும் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை பங்குகளில் முதலீடு செய்தவை நஷ்டம் தந்தாலும் பிற முதலீடு திட்டங்கள் கைகொடுக்கும்.
அவசர நிதியை உருவாக்குதல்: குறைந்தது 6 மாத வாழ்க்கைச் செலவுகளுக்கு சமமான அவசரகால நிதியை வைத்திருப்பது முக்கியம். இந்த நிதி மருத்துவ செலவுகள் அல்லது வேலையிழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் போது உங்களை பாதுகாக்கும். அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருந்தால் அது உங்களுக்கு சேமிப்பாக கூட மாறலாம்.
ஆட்டோமேட்டிக் செட்டிங் அமைத்தல்: உங்கள் முதலீடுகள் மற்றும் சேமிப்பை ஒழுக்கமாக பிடித்தம் செய்யும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
பலரும் சேமிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதை ஒவ்வொரு முறையும் வரவு வைப்பதற்கு மறந்து விடக் கூடும். எனவே இது போன்ற செட்டிங்ஸ் அமைத்து வைப்பதனால் நீங்கள் மறந்து விட்டாலும் தானியங்கி முறையில் உங்களுடைய பணம் எடுத்துக் கொள்ளப்படும்.
அதோடு உங்கள் வருமானமும் வளரும்.
உங்கள் பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்யவும்: செலவுகளை கண்காணித்து தேவையற்ற செலவுகளை குறைக்க பட்ஜெட்டை உருவாக்குங்கள். உருவாக்குவதோடு மட்டும் விட்டுவிடாமல் அதை பின்பற்றி செலவு செய்யுங்கள்.
உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் வருவாய் திறனை அதிகரிக்க திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது புதிய திறன்களை கற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட வளர்ச்சியில் முதலீடு செய்வதும், நீண்ட கால நிதி நலனுக்கு நன்மை பயக்கும். நிபுணரின் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் நிதி இலக்குகள் மற்றும் முதலீட்டு வருமானம் ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொள்ள ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களுக்கு ஏற்ற முதலீட்டு விருப்பங்கள் குறித்து விளக்குவார்.
பொருளாதாரம் மற்றும் சந்தை போக்குகளை கண்காணிக்கவும்: சந்தை நிலவரங்கள் மற்றும் உலக பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் முதலீட்டு திட்டங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். ஓய்வூதிய திட்டத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களை தவறாமல் மதிப்பாய்வு செய்யுங்கள். உங்கள் ஓய்வூதிய கணக்குகளில் தொடர்ந்து பங்களிப்பு செய்யுங்கள்.
பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற ஓய்வூதிய திட்டங்கள் கண்டிப்பாக பிற்காலத்தில் உதவிகரமானதாக இருக்கும்
No comments:
Post a Comment