வேலைவாய்ப்பு செய்திகள் 2024
இந்தப் பதிவில் இவ்விரு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ரூ.6 லட்சம் முதலீட்டுக்கு எந்த திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கிறது என்பதை பார்ப்போம் ஃபிக்சட் டெபாசிட்கள் மொத்தமாக முதலீடு செய்யக்கூடிய ஒரு திட்டமாகும். கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவற்றை பாதுகாப்பாக முதலீடு செய்து வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பிக்சட் டெபாசிட்களை தேர்ந்தெடுக்கலாம். அதுவே எங்களால் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. மாதம் மாதம் முதலீடு செய்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம். பிக்சட் டெபாசிட்கள் (FD) : இதில் தனி நபர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மொத்த தொகையை டெபாசிட் செய்யலாம். அதற்கு வட்டி வழங்கப்படும்.Click here to more government orders
முதிர்வு காலத்தில் வட்டியையும் அசலையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளலாம். FD திட்டங்களைப் பொருத்தவரையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையில் பல்வேறு காலகட்டங்கள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யலாம். 5 வருட FD டெபாசிட்களுக்கு பிரிவு 80C-இன் கீழ் வரி சேமிப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. பிக்சட் டெபாசிட் கணக்கு திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை எவ்வளவு?: FD கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகையாக ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு கிடையாது. உங்களால் இயன்ற அளவு முதலீடு செய்து லாபம் பெறலாம் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்: 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது. 2 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.0% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரெக்கரிங் டெபாசிட்கள்: RD என்று சொல்லப்படுகிற ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டம், மாதம் மாதம் சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. இதில் தனிநபர்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். நீங்கள் செய்யும் முதலீடை பொறுத்து வட்டி வருமானம் வழங்கப்படும். தற்போது போஸ்ட் ஆபீஸ் ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரூ.6 லட்சத்தை RD மற்றும் FD திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம்?: ரூ.6 லட்சத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் மொத்தமாக 7.5% வட்டி விகிதத்தில் ரூ.2,69,969 வட்டி வருமானம் கிடைக்கும். இதனால் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.8,69,969 பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.6 லட்சத்தை ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் மொத்தமாக 6.7% வட்டி விகிதத்தில் ரூ.1,13,659 வட்டி வருமானம் கிடைக்கும் இதனால் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.7,13,659 பெற்றுக் கொள்ளலாம். ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ரெக்கரிங் திட்டங்களை காட்டிலும் பிக்சட் டெபாசிட்கள் அதிக வருமானத்தை வழங்குகின்றன.
No comments:
Post a Comment