ரூ.82 லட்சம் கோடி சாம்ராஜ்யத்திற்கு வாரிசு : வாரன் பஃபெட் அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 16, 2025

ரூ.82 லட்சம் கோடி சாம்ராஜ்யத்திற்கு வாரிசு : வாரன் பஃபெட் அறிவிப்பு

உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான ,அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபரான வாரன் எட்வர்ட் பஃபெட்  தற்போதைய நிலவரப்படி வாரன் பஃபெட்டின் போர்ட்ஃபோலியோ ரூ.82 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது புத்திசாலித்தனமான நிர்வகிப்பால் இத்தனை கோடிக்கு உரிமையாளராக உள்ளார். 92 வயதாகும் வாரன் பஃபெட், தற்போது தனது செல்வத்திற்காக ஒரு வாரிசையும் தேர்ந்தெடுத்துள்ளார். வாரன் பஃபெட் தனது மகனான ஹோவர் பஃபெட்டிடம் பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். நீண்ட காலமாக யோசித்து அதன் பிறகு தனது வாரிசாக தனது மகனையே தேர்ந்தெடுத்துள்ளார். வாரன் பஃபெட் தனது £8.2 டிரில்லியன் கார்ப்பரேட் சொத்தை நிர்வகிக்கும் ஒரு வாரிசைத் தேடியதால், நீண்ட நாட்கள் யோசித்து முடிவை எடுத்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இத்தனை கோடி சாம்ராஜ்யத்தின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு ஹோவர்ட் பஃபெட், "என் தந்தையிடமிருந்து தொழிலைக் கற்றுக் கொண்டேன் நான் பெர்க்ஷயரின் குழுவில் 30 ஆண்டுகளாக இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
பல ஆண்டுகள் பயிற்சியும், கற்றலையும் சரிவர பெற்று வருகிறேன். என் தந்தையின் பெரும்பாலான பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இப்போது என் தந்தை வழங்கிய புதிய பதவிக்கு தயாராக இருக்கிறேன்", என்று கூறியுள்ளார். 2013-ஆம் ஆண்டில் வாரன் பஃபெட் பெர்க்ஷயர் ஹாத்வேயின் நிர்வாகமற்ற தலைவராக தனது மகனான ஹோவர்டை தேர்வு செய்தார். அப்போது அவருடைய தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஒரு ஃபண்ட் மேனேஜர் "ஹோவிக்கு வணிகம் பற்றி எதுவுமே தெரியாது. ஒருபோதும் அவர் பங்குகளில் முதலீடு செய்ததில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பதவிக்கு அவர் எப்படி தகுதியாக இருக்க முடியும்?" என்று கேள்வி கேட்டார். அவருடைய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக வாரன் பஃபெட் "ஹோவி

 


வணிகத்தை நடத்துவது பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஒரு வேளை தவறான தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்ததாக போர்ட் உணர்ந்தால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கலாம்", என்று பதில் அளித்தார். பங்குச்சந்தை முதலீடு மற்றும் செல்வத்தின் அடிப்படையில் தற்போது வாரன் பஃபெட் ஆறாவது பணக்காரராக உள்ளார்.

No comments:

Post a Comment