2025 புத்தாண்டில் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசை மத்திய மோடி அரசு வழங்கியுள்ளது. அதாவது, 8வது ஊதியக்குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று (ஜனவரி 16) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார் எனவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார்.
8ஆவது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்குள் 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும்
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டில் 7ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டில் முடிவடைகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8ஆவது ஊதியக்குழு அமைப்பதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது மத்திய மோடி அரசின் இந்த முக்கிய முடிவு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம், படிகள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் திருத்தப்படும். எனவே இதில் அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 7ஆவது ஊதியக் குழு அமலில் உள்ளது.
அடுத்த ஆண்டில் 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வரும். மத்திய அரசு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தும்.
அடுத்த ஆண்டில் 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வரும். மத்திய அரசு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தும்.
7ஆவது ஊதியக் குழு 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டதால் 8ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment