இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களிடமும் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், இந்த ஆதார் அட்டை போலவே பான் கார்டும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதாவது, PAN கார்டு எனப்படுவது நிரந்தர கணக்கு எண் ஆகும். இது, உங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய பயன்படுகிறது. மேலும், தேசிய அளவில் உங்களை அடையாளப்படுத்தவும் தேவைப்படுகி
அதாவது, இந்த புதிய பான் கார்டில் QR Code பொருத்தப்பட்டுள்ளது. இது, பான் கார்டு மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், தனிப்பட்ட தகவல் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்போது நீங்கள் பழைய பான் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், எவ்வித கட்டணமும் இன்றி ஆன்லைனில் எளிதாக புதிய பான் கார்டை பெற முடியும். அதை எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்
1. முதலில் NSDL அல்லது UTIITSL இணையதளத்தை பார்வையிடவும்.
2. இதில், ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
3. பின்னர், உங்க விவரம் சரியாக இருக்கும் பட்சத்தில், மீண்டும் திரையில் காட்டப்படும்.
4. அதன்பிறகு, உங்கள் நம்பருக்கு OTP வரும், அதை நீங்கள் உள்ளிட வேண்டும்.
5. ‘Agree to the Terms and Conditions’ என்பதை கிளிக் செய்து சப்மிட் செய்யவும். இந்த செயல்முறை நிறைவடைந்த 15 நிமிடங்களில் புதிய பான் கார்டு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், போதிய கட்டணம் செலுத்தினால் 15 வது நாட்களுக்குள் புதிய பான் கார்டு உங்கள் வீடு தேடி வரும்.
No comments:
Post a Comment