அரசாங்கம் ஒருவருக்கு வேலை வழங்குவது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் தனது ஊழியர்களை கவனித்துக் கொள்கிறது. மேலும், வங்கி மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் ஓய்வுக்குப் பிறகும் பயணம் மற்றும் மருத்துவ வசதி போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், புதிய ஊதியக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் பிரகாஷ், வெ. வைத்திலிங்கம் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆனந்த் பதாரியா ஆகியோர் நிதி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் புதிய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என நிதி அமைச்சகம் உறுதி செய்து அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், இதை கண்டித்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதியத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்க ஊழியர்கள் முன்மொழிந்துள்ளனர்
No comments:
Post a Comment