வரி செலுத்துவோர் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் வருமான வரித்துறை, பல்வேறு வரி விலக்குகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 80 C ஆனது, வரி செலுத்துவோர் தங்கள் வரிக்கட்டணத்தை குறைக்க பல பலனளிக்கும் வரி விலக்கு உத்திகள் கொண்டுள்ளது. இந்த வரி விலக்கு உத்திகள் பற்றி தற்போது விரிவாக காண்போம்.
அதாவது வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80 C இன் கீழ் தனிநபர்கள், இந்திய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) வரிவிலக்கு கோர தகுதியுடையவர்கள். மேலும் தினசரி சம்பளம் பெறும் தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுயதொழில் செய்யும் நிபுணர்களும் இந்த வரி விலக்கு மூலம் பயன் பெறலாம். இந்த திட்டமானது தனிநபரின் மொத்த வருவாயில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.150,000 வரை வரிக் கட்டணத்தை குறைக்க உதவுகிறது.
மேலும் உங்கள் பெற்றோர் வரி செலுத்துபவராக இருந்தால், வீட்டுச் செலவுகளுக்காக அவர்களிடமிருந்து நீங்கள் கடன் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தியதற்கான ஆதாரத்தை வைத்து பிரிவு 24 B இன் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
மேலும் பிரிவு 10(13 A)-ன் கீழ் உங்கள் பெற்றோர்களை வீட்டு உரிமையாளர்களாக அறிவித்து வாடகை ஒப்பந்தம் மற்றும் ரசீதுகள் போன்ற சரியான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரி விலக்கு பெறலாம்.
No comments:
Post a Comment