ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலை பற்றாக்குறை நிலவி வருகிறது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு முகாம் அமைத்தல் போன்ற பணிகளை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பலர் தனியார் நிறுவனத்தில் வேலை பெறுகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு நேற்று பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.
5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்குவதை இலக்காக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இளைஞர்கள் இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது பூர்த்தியான 24 வயதுக்கு உட்பட்ட 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர ஒரு முறை உதவியாக ரூ.6,000 வழங்கப்படும். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment