TNPSC Group 4 காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை; X தளத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, September 18, 2024

TNPSC Group 4 காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை; X தளத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 Tnpsc group 4தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பான ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது

இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. நேர்காணல் கிடையாது. எழுத்து தேர்வின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இத்தேர்வை எழுதிபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் உள்ளது. அரசு பணியில் சேர வேண்டும் என்ற வேட்கையோடு தயாராகி  

இளைஞர்களுக்கு குரூப் 4 தேர்வு என்பது முதற்கட்ட நுழைவாக உள்ளது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த பின்னர், அடுத்தத்தடுத்து துறை சாரந்த தேர்வுகள் எழுதி மேற்பதவிகளுக்கு செல்ல முடியும். மேலும், குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது மட்டுமே கல்வித்தகுதியாக இருப்பதினால் தமிழகம் முழுவதும் இத்தேர்வை தவறாமல் இளைஞர்கள் எழுதி வருகின்றனர். 

இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு அரசு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் இன்னும் 18 மாதங்களில் நிரப்பப்படும் என அறிவித்தார்.அதன்படி, டி.என்.பி.எஸ்.சி மூலம் மட்டும் 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் குரூப் 4 காலிப்பணியிடங்கள் சுமார் 10,000 வரை அதிகரிக்கும் என தேர்வர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

 


ஆனால் 480 இடங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது தேர்வர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 



எனவே கூடுதல் காலியிடங்களை சேர்த்து அறிவிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தவகையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை அதிகரிக்கக் கோரி எக்ஸ் தளத்தில் #increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் மூலம் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

No comments:

Post a Comment