தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: DGNM படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 6,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரப்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி - 628206
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2024
Job details: Click here
No comments:
Post a Comment