கூகுள் பே (Google Pay) மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் – என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) கொண்டு வந்துள்ள யுபிஐ சர்க்கிள் விதிகள் (UPI Circle Rules) அமலாகி இருக்கின்றன.
Click here to more government orders
ஆனால், முதலில் கூகுள் பே நிறுவனம் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், அந்த கஸ்டமர்களே இப்போது முதலில் இந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த ஒரேவொரு அக்கவுண்ட் விதிகளிலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா – ஆர்பிஐ (Reserve Bank of India) மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, ஒரே பேங்க் அக்கவுண்ட்டில் இரண்டு யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று அக்கவுண்ட்கள் பிரிக்கப்பட்டு, பணம் அனுப்புவதில் உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம்.
அதாவது, பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்கும் நபர் பிரைமரி பயனர் (Primary User) ஆவார். இவர் அந்த நம்பரில் வழக்கம் போல யுபிஐ ஐடியை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதன்பிறகு 2ஆவது முறையாக செகண்டரி பயனர் (Secondary User) யுபிஐ ஐடியையும் அவரால் உருவாக்கி கொள்ள முடியும்.
இப்படி இருப்பதால், எந்த வொரு சிக்கலும் இன்றி இரண்டு யுபிஐ ஐடிகள் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்து கொள்ள முடியும். மேலும்,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேவையில்லை என்றால், செகண்டரி பயனரை எளிதாக நிறுத்தி வைக்கவும் அல்லது ஒரு பயனரை தூக்கிவிட்டது மற்றொரு பயனரை புதிதாக கொண்டுவரவும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆகவே, அடுத்த சில நாட்களில் கூகுள் பே ஆப்பில் பல்வேறு யுபிஐ ஐடிக்களை உருவாக்கி கொள்ளலாம். மேலும், செகண்டரி பயனரின் மொபைல் நம்பரானது, பிரைமரி பயனரில் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். அதேபோல அவருக்கு யுபிஐ ஐடி இருக்க வேண்டும். இதை பிரைமரி பயனர் உருவாக்கலாம்.
