மத்திய அரசின் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்:18.8.2024 திருத்தம் செய்ய கடைசி நாள் 27.8.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, August 8, 2024

மத்திய அரசின் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்:18.8.2024 திருத்தம் செய்ய கடைசி நாள் 27.8.2024

 


மத்திய அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) கிரேடு ’சி’ மற்றும் ’டி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது

பணி விபரம்: மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் உள்ள ஸ்டெனோகிராபர் கிரேடு சி & டி பணியில் உள்ள 2006 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித் தகுதி : இந்த ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 17.08.2024 தேதி படி 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு: கிரேடு ’சி’ பணியிடங்களுக்கு, 01.08.2023 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு ’டி’ பணியிடங்களுக்கு, 01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

சம்பளம் விவரம்: கிரேடு ’சி’ பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையும், கிரேடு ’டி’ பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்குக் கணினி வழித் தேர்வு (Computer Based Test) மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும்.

இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளிலிருந்து தலா 50 கேள்விகளும், ஆங்கிலப் பாடப்பிரிவிலிருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
திறனறி தேர்வு சுருக்கெழுத்து தட்டச்சு திறனைச் சோதிக்கும் வகையில் 50 நிமிடங்களுக்கு நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் 17.08.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்எஸ்சி அறிவித்துள்ள இந்த ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

 


இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணம் செலுத்துவதற்கு 18.08.2024 கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு 27.08.2024 முதல் 28.08.2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான கணினி வழித் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment