எல்ஐசி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தில் உள்ள 200 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணி விபரம்: ஆந்திரப் பிரதேசம் - 12, அசாம் - 5, சத்தீஸ்கர் - 6, குஜராத் - 5, ஹிமாச்சல பிரதேசம் - 3, ஜம்மு மற்றும் காஷ்மீர் - 1, கர்நாடகா - 38, மத்திய பிரதேசம் - 12, மகாராஷ்டிரா - 53, புதுச்சேரி - 1, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 10,
தெலுங்கானா - 31, உத்தரப்பிரதேசம் - 17, மேற்கு வங்காளம் - 5 என 200 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் படித்து 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதிப்படி 21 வயது நிரம்பியவர்களாகவும் 28 வயதிற்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.07.1996க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு தேதிகளில் பிறந்தவர்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.lichousing.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தின் மூலமாக ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்
. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.800 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment