தெற்கு ரயில்வேயில் உள்ள அப்ரன்டிஸ் பணியில் உள்ள 2,438 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பணியிடங்கள்: கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337 மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379, சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் - 722 என மொத்தம் 2,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: தெற்கு ரயில்வேயின் இந்த அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஐடிஐ,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
10ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கு மேல் 22 இல் இருந்து 25 வயதிற்கு உள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் 15 இல் இருந்து 22 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் உள்ள ஐடிஐ
விண்ணப்பதாரர்களாக இருந்தால் 15 வயதிலிருந்து 24 வயது வரை விண்ணப்பிக்கலாம். எம்எல்டி விண்ணப்பதாரர்களாக இருந்தால் 15 வயதிலிருந்து 24 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விபரம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆட்சேர்ப்பு தொடர்புடைய இணைப்பை கிளிக் செய்யவும்அதில் கேட்டுள்ள விவரங்களை அனைத்தையும் பதிவு செய்யவும். அதன் பிறகு உங்கள் புகைப்படம் மற்றும் கட்டைவிரலைப் பதிவேற்றம் செய்ய gf வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி நாள் ஆகும்.
தேர்வு முறை: தெற்கு ரயில்வேயில் உள்ள இந்த அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment