The Judge Group" என்ற பணியாளர்களை தேர்வு செய்யும்
நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்துப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசாங்கம் ஒப்பந்த வேலைகள், வான்வழி மற்றும் பாதுகாப்பு துறைகளில் 15 சதவீதம் அதிகரித்த வேலைவாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முன்னணி IT நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருவதால், இதுபோன்ற அரசாங்க ஒப்பந்த துறையில் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசாங்க ஒப்பந்த துறை மிகப் பெரியது. அதில் நுழைவது சிலருக்கு சிக்கலாக இருக்கலாம். சிலர் தாங்களே ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
உதாரணமாக பாலம் அமைப்பதற்கு அரசாங்க ஒப்பந்தம் எடுப்பது போன்ற வேலைகளில் சிலர் ஈடுபட்டு அதன் பிறகு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொள்கின்றனர். அரசாங்க ஒப்பந்தங்களை பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன. இந்த வகையான நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் இல்லை. இவை தனியார் நிறுவனங்கள் தான், அனால் தொடர்ந்து அரசாங்க ஒப்பந்தங்களை எடுத்து வேலை வழங்கி வருகின்றன
எனவே இது போன்ற அரசாங்க குத்தகை பெறுவது அல்லது அரசாங்க குத்தகை
எடுக்கும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.
1. ஒரு வேலையில் இருந்து, இன்னொரு வேலைக்கு மாறிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் மட்டுமே ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறவும். சில அரசாங்க குத்தகைகள் ஒன்று முதல் ஆறு மாத காலங்களில் முடிவடையும். இதுபோன்ற நேரங்களில் உங்கள் ரெஸ்யூமில் ஒன்றன்பின் ஒன்றாக உங்களுடைய எக்ஸ்பீரியன்ஸ் விவரங்களை நீங்கள் கொடுக்கலாம். ஆனால் வான்வெளி, பாதுகாப்பு போன்ற சில துறைகளில் நீண்ட கால எக்ஸ்பீரியன்ஸ் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது
2. உங்கள் லிங்க்டு இன் அக்கவுண்ட்டை புதுப்பித்து வைத்திருங்கள். சிலர் கல்லூரியில் படிக்கும்போது லிங்க்டு இன் அக்கவுண்ட் திறந்திருப்பார். ஆனால், முடித்த பிறகு அதனை அப்டேட் செய்ய மறந்து இருக்கலாம். லிங்க்டு இன் உலகெங்கும் உள்ள பல நபர்களை இணைக்கிறது.
உங்களுடைய தற்போதைய விவரங்களை வைத்த அப்டேட் செய்வதன் மூலம் நீங்கள் வேலைவாய்ப்பை பெறுவது அதிகரிக்கிறது.
3. அரசாங்க ஒப்பந்த வேலைகள் குறித்த செய்திகளை இணையதளங்கள் அல்லது சோசியல் மீடியா பக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பது போன்ற விபரங்கள் உங்களுக்கு தெரிய வரும். நீங்கள் செய்தித்தாள்களையும் வாங்கி படிக்கலாம், அதிலும் அரசாங்க ஒப்பந்த வேலைவாய்ப்பு விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. பணியமர்த்தும் நபர்களை நேரடியாக தொடர்புகொள்ளவும். பல அரசாங்க ஒப்பந்த வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கும் பணியமர்த்துபவர்களிடம் நேரடியாக பேசி,
வேலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அதில் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் சுய விவரங்களை வைத்து ஒரு அக்கவுண்ட் உருவாக்குவதன் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் பல நிறுவனங்களின் தொடர்பு தகவல்களை நீங்கள் பெற முடியும்.
வேலையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அதில் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் சுய விவரங்களை வைத்து ஒரு அக்கவுண்ட் உருவாக்குவதன் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் பல நிறுவனங்களின் தொடர்பு தகவல்களை நீங்கள் பெற முடியும்.
No comments:
Post a Comment