தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாலர் மற்றும் பல்நோக்குபணியாளர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 30.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
OSC காலிப்பணியிடங்கள்:
Case Worker – 7 பணியிடங்கள்
Security – 2 பணியிடங்கள்
Multipurpose Helper – 2 பணியிடங்கள்
என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
இளங்கலை சமூகபணி 1 வருடம் அனுபவம் உள்ளவர்கள் வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
Case Worker ரூ.15,000/-
Security ரூ.10,000/-
Multipurpose Helper ரூ.6,400/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்
. விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் 641018 என்ற முகவரிக்கு 30-03-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
Job Notification CLICK HERE
Application form: Click Here
No comments:
Post a Comment