தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது Pharmacist, EEG Technician ஆகிய பணிகளுக்கென நடைபெற உள்ள நேர்காணல் தேதியையும், Weightage மதிப்பெண் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது.
TN MRB:
தமிழக மருத்துவமனைகளில் Pharmacist (28), EEG Technician (10) பணிகளுக்கென ஏற்பட்டுள்ள 38 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பை TN MRB ஆனது 28.11.2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Merit List மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று (22.02.2024) இப்பணிகளுக்கு Merit List மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது
இவ்வாறு Pharmacist, EEG Technician பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நேர்காணல் ஆனது 27.02.2024 அன்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், 7 வது தளம், DMS கட்டிடம், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 6 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட
நபர்களின் பட்டியலை மற்றும் Weightage மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment