GATE 2024 தேர்வு நாளை (பிப்.3) முதல் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, February 2, 2024

GATE 2024 தேர்வு நாளை (பிப்.3) முதல் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு

 2024 ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு நாளை (பிப்.3) முதல் தொடங்க இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கேட் தேர்வு

பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்நிலையில், இந்த தேர்வானது நாளை (பிப்.3) முதல் தொடங்க இருக்கிறது.

பிப். 4, பிப். 10 மற்றும் பிப். 11 தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை gate2024.iisc.ac.in என்ற இந்திய அறிவியல் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி  இருக்கிறது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளில் மூன்று மணி நேரம் நடைபெறும். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரையும் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.

No comments:

Post a Comment