Tamilnadu Open University (TNOU):BEd சிறப்புக் கல்வி பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் LAST DATE 20.1 2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 4, 2024

Tamilnadu Open University (TNOU):BEd சிறப்புக் கல்வி பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் LAST DATE 20.1 2024

 applicati.jpg?w=400&dpr=3

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜன.20 வரை விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளா் இ.இரா.செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசால் (அரசாணை எண் 56; 2012) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படிப்பை முடித்தவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றலாம்.


இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த டிச.29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி கடைசி நாள்.


இந்தப் படிப்பில் சேர விரும்புவோா் விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள

 


கல்வித் தகுதியுடன் இருப்பது அவசியம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு  https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment