இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்தில் JEE மற்றும் NEET தேர்வுகளுக்கான நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம், இங்கு படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், புற்றீசல் போல அதிகரித்து வரும் போட்டித் தேர்வு கோச்சிங் கிளாஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரி மும்பையைச் சேர்ந்த டாக்டர் அனிருதா நாராயண் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் என்.பட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் மோகினி பிரியா ஆஜரானார்.
No comments:
Post a Comment