தேசிய ஆயுஷ் இயக்கத்தின் தேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, November 10, 2023

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் தேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு


 தேசிய ஆயுஷ் இயக்கத்தின்கீழ், தேனி  மாவட்டத்தில் மாவட்ட திட்ட மேலாளர் (District Program Manager) மற்றும் தரவு உதவியாளர் (Data Assistant) ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விவரங்கள்:  மாவட்ட திட்ட மேலாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலமாக சித்த மருத்துவத்தில் இளநிலை பட்டப்படிப்பு (BSMS) முடித்திருக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு (M.D.(Siddha)) முடித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கணினி பயன்பாடு பற்றிய கல்வியறிவு பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொதுசுகாதாரத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

மாதாந்திர தொகுப்பூதியம் : ரூ.30000/-

தரவு உதவியாளர் பணியிடத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் வாயிலாக பின்வரும் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கணினி பயன்பாடு (Computer Application) / தகவல் தொழில்நுட்பம் (IT) வணிக மேலாண்மை (Business Administration) கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை தொழில்நுட்பம் (B.E. in Computer Science / B.Tech - IT).

குறைந்தபட்சம் ஒருவருடம் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு பற்றிய கல்விச்சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டட்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுசுகாதாரத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாதாந்திர சம்பளம் ரூ.15000 

நிபந்தனைகள்: இப்பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே, எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 17:11:2023 (மாலை 5 மணிக்குள்) ஆகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி: மாவட்ட நலச்சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகம்,

ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், தேனி- 625512 ஆகும்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment