இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 496 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Junior Executive (Air Traffic Control)
காலியிடங்களின் எண்ணிக்கை : 496
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம் அல்லது இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம் : ரூ. .40000-3%-140000 (வருடத்திற்கு ரூ. 13 லட்சம்)
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆன்லைனில் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
Job Notification Click Here
Apply online CLICK HERE
No comments:
Post a Comment