டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின் கீழ் அஸ்ஸாமிய அரசு அந்த மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கவுள்ளது.
அதன்படி, 35,775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30 அன்று ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.
75 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்களுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
அஸ்ஸாமிய சுற்றுலா துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா பேசும் போது, “மாநில அரசு 35,775 அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கவுள்ளது. இந்த விழா நவ. 30-ல் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment