SBI வங்கியில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, October 12, 2023

SBI வங்கியில் வேலை வாய்ப்பு


 439 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

🦄காலியிடங்கள் விவரம்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 240 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 94 இடங்களும்,

 


பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 30 இடங்களும் , 53 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 22 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

🦄கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த 45 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன்னனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


🦄முக்கியமான தேதிகள் : ஆன்லைன் எழுத்துத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 70 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 30 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் எடுத்துக் கொண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

🦄விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

🪂Job Notification Click Here

🪂Apply online Click Here 

No comments:

Post a Comment