திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளர், தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
துணை பதிவாளர் (Deputy Registrar)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தனி உதவியாளர் (Personal Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை எழுத்தர் (Upper Division Clerk)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelors' Degree in Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை எழுத்தர் (Lower Division Clerk)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வு; ஓ.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2023
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment