இந்திய இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் (MCTE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
MCTE பணியிடங்கள்:
MCTE கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள Professor பணிக்கென 01 பணியிடமும், Associate Professor பணிக்கென 07 பணியிடங்களும், Assistant Professor பணிக்கென 11 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
MCTE பணிக்கான கல்வி விவரம்:
இந்த இராணுவ துறை சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Ph.D பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
MCTE பணிக்கான வயது விவரம்:
இப்பணிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பானது 56 என MCTE கல்வி நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
MCTE பணிக்கான சம்பள விவரம்:
Professor, Associate Professor, Assistant Professor பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.31,500/- முதல் ரூ.45,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
MCTE தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Screening Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
MCTE விண்ணப்பிக்கும் முறை:
இந்த MCTE கல்வி நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் dscoordfce@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment