🟠விளையாட்டு வீர்ரகளுக்கு வாய்ப்பு!
குஜராத் வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணியிடங்களுக்கான வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🟠மொத்த காலியிடங்கள்: 59
🟠பணி: வருமான வரி ஆய்வாளர் - 2
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
🟠பணி: வரி உதவியாளர் - 26
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
🟠பணி: எம்டிஎஸ் - 31
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
🟠தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட பிரிவில் மாநிலங்கள், பல்கலை அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
🟠வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
🟠தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேரமுகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
🟠விண்ணப்பிக்கும் முறை: https://incometaxgujarat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 15.10.2023
🟠Job Notification Click Here
🟠Apply online Click Here
No comments:
Post a Comment