தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது.
அட்மிட் கார்டு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பை 01/06/2023 அன்று வெளியிட்டு, அன்று முதல் விண்ணப்ப செயல்முறைகளை தொடங்கியது. விண்ணப்பங்கள் 30/06/2023 ம் தேதி வரை பெறப்பட்டது. மாதம் ரூ 27700 முத்தம் ரூ. 44770 வரை இப்பணிக்கு ஊதியம் வழங்கப்படும்
சிவில் நீதிபதி பணிக்கான முதற்கட்ட தேர்வு 19/08/2023 ம் தேதி காலை 09.30 முதல் மதியம் 12.30 வரை நடக்க உள்ளது. தற்போதுTNPSC தேர்வாணையம் ஆனது சிவில் நீதிபதி முதற்கட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இருந்து தேர்வர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment