தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் பணிக்கான வாய்மொழித்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அறிவிப்பி வெளியீடு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்ஸ்பெக்டர் ஆஃப் மீன்வளத்துறை பணிக்கான அறிவிப்பை கடந்த 14.10.2022. அன்று வெளியிட்டது. அறிவிப்பின் படி இப்பணிக்கு மொத்தம் 64 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் அணைத்து பெறப்பட்டு தேர்வு 08.02.2023 அன்று நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி 28/04/2023 அன்று நடத்தப்பட்டது.
விண்ணப்பதாரர்களின் பட்டியல் 26/06/2023 அன்று வெளியிடப்பட்டு, தற்போது வாய்மொழித்தேர்வுக்கான மெமோ வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் 11.07.2023 மற்றும் 12.07.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடக்கும் வாய்மொழித்தேர்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment