நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-07-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | நீலகிரி கலெக்டர் அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 4 |
வேலைவாய்ப்பு செய்திகள் 2023விண்ணப்பிக்க கடைசி தேதி | 27-07-2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கலெக்டர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
உதவியாளர் வயது வரம்பு:
நீலகிரி கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC, MBC விண்ணப்பத்தர்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் SC, ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
நீலகிரி கலெக்டர் அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் அதிரடி செயல்பாடு – அரசு புதிய உத்தரவு!
கலெக்டர் அலுவலக பணிக்கான சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 – 50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 27-07-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment