கலை கல்லுாரி காலியிடம் புதிய நடைமுறை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 1, 2023

கலை கல்லுாரி காலியிடம் புதிய நடைமுறை அறிவிப்பு



தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, முதல் கட்ட சேர்க்கை, கடந்த மாதம், 20ம் தேதியுடன் முடிந்தது. மீதமுள்ள இடங்களுக்கு, கல்லுாரிகளிலேயே இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


இந்த சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு சமூக பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் சேராமல், இடங்கள் காலியாக இருந்தால், பிற சமூகத்தினருக்கு அவற்றை வழங்க வேண்டும் என்றும், உயர் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.பட்டியலினம், பழங்குடியினர் பிரிவில் காலியிடம் இருந்தால், அவற்றை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியதில் காலியிடம் இருந்தால், அதை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என, வழிகாட்டு முறைகளில் கூறப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment