தமிழக அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பில் தளர்வு.. அரசின் அதிரடி உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 29, 2023

தமிழக அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பில் தளர்வு.. அரசின் அதிரடி உத்தரவு



 தமிழக அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாகவுள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் சுமார் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. இதனால் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை கவனிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில்அரசு அங்கன்வாடி உதவியாளர்களாக பணி புரிந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களை பணியாளர்களாக பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது காலியாகவுள்ள பணியாளர் பணியிடங்களை 25% உதவியாளர்களை கொண்டு நியமிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அரசின் விதிமுறைப்படி அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு 20 முதல் 40- க்குள் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து பணியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு 25 முதல் 35 – குள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment