ரிசர்வ் வங்கி போட்ட திடீர் உத்தரவு? அக்கவுண்டில் 30,000 ரூபாய் இருக்க கூடாது? என்பது உண்மையா ? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 20, 2023

ரிசர்வ் வங்கி போட்ட திடீர் உத்தரவு? அக்கவுண்டில் 30,000 ரூபாய் இருக்க கூடாது? என்பது உண்மையா ?

RBIயிடமிருந்து வங்கிகளுக்கு அவ்வப்போது பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வங்கிகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதில் உங்கள் கணக்கில் 30,000 ரூபாய்க்கு மேல் இருப்பு இருந்தால் உங்கள் கணக்கை மூடலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த  செய்தியைப் பார்த்ததும் வாடிக்கையாளர்களின் மனதில் பல வகையான கேள்விகள் எழுந்துள்ளன

உண்மை சரிபார்ப்பு!

இந்த வைரல் செய்தி பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மைச் சரிபார்ப்பு செய்தது. அதில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரா இல்லையா என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.


போலியான செய்தி!

இந்த செய்தியை PIB உண்மை சரிபார்ப்பு தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே இல்லை என்றும் அது முற்றிலும் போலியான செய்தி என்றும் தகவல் தெரிவித்துள்ளது. உண்மையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து அப்படி ஒரு அறிவிப்பு வெளிவரவே இல்லை.

நீங்களும் சரிபார்க்கலாம்!

இதுபோன்ற போலியான செய்திகளை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகளில் இருந்து விலகி இருக்கவும், இந்த செய்திகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, நீங்கள் எந்தவொரு வைரல் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பினால் 918799711259 என்ற மொபைல் எண் அல்லது socialmedia@pib.gov.in என்ற ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம்


No comments:

Post a Comment