REC லிமிடெட் பொதுத்துறை நிறுவனத்தின் வேலை வாய்ப்பு

 REC லிமிடெட் என்பது ஒரு மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு Assistant Manager, Dy. General Manager மற்றும் Officer (F&A) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager – 2 பணியிடங்கள்
  • Dy. General Manager (F&A) – 1 பணியிடம்
  • Officer (F&A) – 2 பணியிடங்கள்
  • Assistant Manager (IT) – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountancy/Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B. Tech/ MCA/ M.Tech./ MCS/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

REC சம்பள விவரம்:
  • Assistant Manager – ரூ. 60,000- 1,80,000
  • Dy. General Manager (F&A) – ரூ. 1,00,000- 2,60,000/-
  • Officer (F&A) – ரூ.50,000- -1,60,000/-
  • Assistant Manager (IT) – ரூ. 60,000- 1,80,000/-
தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.recindia.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 01.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Leave a Comment