Skip to content-
- பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 8,612 பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பொதுத் துறை வங்கி வேலையை தங்கள் கனவாகக் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
- மொத்த காலியிடங்கள்: 8612 – பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை- 1 பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது தகுதிகள்: அலுவலக உதவியாளர் (பல்துறை பணி) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். அலுவலர் நிலை 1 (துணை மேலாளர்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். அலுவலர் நிலை 2 (மேலாளர்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 32-க்கு கீழும், 21-க்கு மேலும் இருக்க வேண்டும். அலுவலர் நிலை 3 (மூத்த மேலாளர்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2023 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்