இந்திய அஞ்சல் துறையில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டம் இருக்கிறது. அந்த வகையில் அஞ்சல் அலுவலக RD திட்டம் தற்போது 6.2% வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
வட்டி விகிதம்
இந்தியாவில் அஞ்சல் துறையில் பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பனதாக இருப்பதால் பலர் அதில் முதலீடு செய்ய இருக்கின்றனர். அந்த வகையில் அஞ்சல் துறை RD திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தில் வைப்பாளர்களுக்கு 6.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு மாதம் ரூ. 100 அல்லது ரூ.10ன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகை ஆகும்.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அதற்கான வரம்பு எதுவும் இல்லை. மேலும் தபால் அலுவலக RD திட்டத்தில் உள்ள வைப்புத்தொகைகள் கணக்கை தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். மேலும் கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பத்தை சமர்பிப்பதன் மூலம் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
ரூ.5000 மாத பங்களிப்பு – RD திட்டத்தில் மாதாந்திர பங்களிப்பு 5000 ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில் 3.52 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்தால், 10 ஆண்டுகளில் கார்ப்பஸ் ரூ. 8.32 லட்சமாக இருக்கும்
ரூ. 1000 பங்களிப்பு – RD திட்டத்தில் மாதாந்திர பங்களிப்பு ரூ.1000 என்றால் 5 ஆண்டுகளில் ரூ. 70,431 கார்பஸ் கிடைக்கும். அதனை 5 ஆண்டுகள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ. 1.66 லட்சமாக இருக்கும்.
ரூ,10 ஆயிரம் பங்களிப்பு – RD திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10000 செலுத்தினால் 5 ஆண்டுகளில் ரூ. 7.04 லட்சம் கார்பஸ் கிடைக்கும். அதனை 5 ஆண்டுகள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில் மொத்தம் கார்ப்பஸ் ரூ. 16.6 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment