இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மாதாந்திர ஓய்வூதிய முறையில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் கணக்குதாரர்களுக்கு ஊதியத்தின் அடிப்படையில் மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதியம்:
இந்தியாவில் EPFO திட்ட பயனர்களுக்கு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 12 % பிடித்தம் செய்யப்பட்டு அதில் 8.33% ஓய்வூதியத்திற்காக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியம் 15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை பெறுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்று EPFO அறிவித்தது.
அத்துடன் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 26 வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் இபிஎப்ஓ அமைப்பு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான அடிப்படை பார்முலாவை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இதன் வாயிலாக ஒரு ஊழியர் அவரது அடிப்படை ஊதியத்தை பொறுத்து ஓய்வூதியம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ஆக்சுவரி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இது வெளியான பிறகே இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும்
No comments:
Post a Comment