இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: INDIAN FOREST SERVICE EXAMINATION காலியிடங்கள்: 150 தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விவசாயம், வனம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர். முதன்மைத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை மட்டும். விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2023Job notification: Click Here
No comments:
Post a Comment